அவுகன புத்தர் சிலை

அவுகன சிலை என்பது இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு அருகாமையில் உள்ள- ஒரு புத்தர் சிலை ஆகும். இது 40 அடிக்கு மேல் (12 மீ) உயரத்தைக் கொண்ட இந்த சிலை 5 ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய கிரானைட் பாறை முகத்திலிருந்து செதுக்கப்பட்டுள்ளது. இது அபய முத்திரையின் மாறுபாட்டை சித்தரிக்கிறது, மேலும் நெருக்கமாக அணிந்திருக்கும் அங்கி விரிவாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை தாதுசேன மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதுடன், பண்டைய இலங்கையில் கட்டப்பட்ட ஒரு சிலைக்கு அவுகன சிலை சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும். இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.













